தமிழ் நிரல்
ஏன் தமிழ் நிரல் ?
உங்கள் கனவுகளை தமிழில் குறியீடு செய்ய
முழு தமிழ் ஆதரவு
100% தமிழ் தொடரியல் (Syntax). மாறிகள், செயலிகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் நம் தாய்மொழியிலேயே. ஆங்கிலச் சார்பின்றி இயல்பாக நிரல் எழுதலாம்.
வேகமான செயலாக்கம்
மேம்படுத்தப்பட்ட தொகுப்பான் மூலம், உங்கள் குறியீடுகள் நேரடியாக இயந்திர மொழிக்கு (Native Code) மாற்றப்படுகிறது. இதனால் அதிவேக செயல்திறன் சாத்தியமாகிறது.
குறுக்கு மேடை
ஓர் முறை எழுதுங்கள், எங்கும் இயக்குங்கள் (Write Once, Run Anywhere). Windows, macOS, Linux மற்றும் WebAssembly என அனைத்து தளங்களிலும் செயல்படும்.
கற்றல் மிக எளிது
நிரலாக்க முன் அனுபவம் தேவையில்லை. உள்ளுணர்வு சார்ந்த (Intuitive) வடிவமைப்பால், மாணவர்கள் முதல் புதியவர்கள் வரை அனைவரும் எளிதாகக் கற்கலாம்.
தொகுப்பு மேலாளர்
"நிரல் தொகுப்பு மூலம் உங்கள் திட்டங்களுக்கான சார்புகளை (Dependencies) எளிதாக நிர்வகிக்கலாம். திறந்தமூல சமூகத்தில் இணைந்து நீங்களும் பகிரலாம்.
தரவுத்தளம் v1.0.0 நிறுவப்பட்டது!
துடிப்பான சமூகம்
உலகளாவிய தமிழ் மென்பொருளாளர்களின் ஒருங்கிணைந்த திறந்தமூலக் (Open Source) குடும்பம். ஐயங்களைத் தீர்க்கவும், பங்களிக்கவும் குழுக்களில் இணையுங்கள்.
பதிவிறக்க தயாரா ?
உங்கள் இயங்குதளத்திற்கு ஏற்ற பதிவை தேர்வு செய்து, பயணத்தை தொடங்குங்கள்.